Thursday, June 30, 2016

Thirukkural - Naanuththuravuraiththal

114. நாணுத் துறவுரைத்தல்(Naanuththuravuraiththal) - The Abandonment of Reserve

காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love
களவியல் (Kalaviyal) - The Pre-marital love
நாணுத் துறவுரைத்தல்(Naanuththuravuraiththal) - The Abandonment of Reserve
1131 காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse
1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse
1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful
1134 காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust
1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night
1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse
1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust
1138 நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)
1139 அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
And thus, in public ways, perturbed will rove
1140 யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment