Thursday, June 30, 2016

Thirukkural - Kayamai

108. கயமை(Kayamai) - Baseness

பொருட்பால்(Porutpaal) – Wealth
குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
கயமை(Kayamai) - Baseness
1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)
1072 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good)
1073 தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
The base resemble the Gods; for the base act as they like
1074 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
The base feels proud when he sees persons whose acts meaner than his own
1075 அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent
1076 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்
கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.
The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard
1077 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists
1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death
1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food
1080 எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment