Monday, February 29, 2016

Aathichoodi Uyirmei Varukkam

ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Quotes for Compound Letters

Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation

க
கண்டொன்று சொல்லேல்
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே
Don't exaggerate what you saw.

ங
ஙப் போல் வளை
'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்
Bend to befriend.

ச
சனி நீராடு
சனி(குளிர்ந்த) நீராடு
Shower regularly.

ஞ
ஞயம்பட உரை
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு
Sweeten your speech.

ட
இடம்பட வீடு எடேல்
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே
Judiciously space your home.

ண
இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்
Befriend the best.

த
தந்தை தாய்ப் பேண்
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று
Protect your parents.

ந
நன்றி மறவேல்
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே
Don't forget gratitude.

ப
பருவத்தே பயிர் செய்
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்
Husbandry has its season.

ம
மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே
Don't land-grab.

ய
இயல்பு அலாதன செய்யேல்
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே
Desist demeaning deeds.

ர
அரவம் ஆட்டேல்
பாம்புகளை பிடித்து விளையாடாதே
Don't play with snakes.

ல
இலவம் பஞ்சில் துயில்
இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
Cotton bed better for comfort.

வ
வஞ்சகம் பேசேல்
கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
Don't wile.

ழ
அழகு அலாதன செய்யேல்
இழிவான செயல்களை செய்யாதே
Detest the disorderly.

ள
இளமையில் கல்
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
Learn when young

ற
அறனை மறவேல்
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
Cherish charity.

ன
அனந்தல் ஆடேல்
மிகுதியாக தூங்காதே
Over sleeping is obnoxious
   


Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam   |   ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam   |   ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam   |   ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam   |   ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam   |   ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam   |   ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam   |   ஆத்திச்சூடி - வகர வருக்கம் -  Aathichoodi Vakara Varukkam

List of topics: Tamil

No comments:

Post a Comment