Thursday, June 30, 2016

Thirukkural - Punarchchividhumpal

129.

காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love
கற்பியல் (Karpiyal) - The Post-marital love
புணர்ச்சி விதும்பல்(Punarchchividhumpal) - Desire for Reunion
1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust
1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet
1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him
1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
My heart, forgetting all, could not its love restrain
1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him
1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults
1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace
1289 மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature
1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment