Tuesday, June 28, 2016

Thirukkural - Azhukkaaraamai

17. அழுக்காறாமை(Azhukkaaraamai) - Not Envying

அறத்துப்பால்(Araththuppaal) – Virtue
இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
அழுக்காறாமை(Azhukkaaraamai) - Not Envying
161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
162 விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others
163 அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds
165 அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction
166 கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment
167 அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister
168 அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered
170 அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
Never have the envious become great; never have those who are free from envy been without greatness



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment